Publish Date: Wed, 17 Oct 2007 (16:13 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)
கேரள மாநிலம் அமைக்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில் நடத்தப்படும் கேரள பிறவி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பங்கேற்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார்.
கேரள அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மாநிலம் உருவானதை நினைவு கூறும் வகையில் அடுத்த மாதம் முதல் தேதி கேரள மாநிலம் பிறந்த விழா கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் அன்றைய தினம் தூய்மையான கேரளாவை உருவாக்கும் திட்டத்தையும், விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்து விருதுகளை வழங்கி உரையாற்ற உள்ளதாகவும் அச்சுதானந்தன் தெரிவித்தார்.
இதனிடையே அன்றைய தினம் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே மண்டலத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாததைக் கண்டித்து இந்த பந்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன், நவம்பர் 1ஆம் தேதி கேரள பிறவி நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் வருவதால் மாநிலத்தின் பெருமையைக் கருத்தில் கொண்டு பாஜக நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Webdunia
Publish Date: Wed, 17 Oct 2007 (16:13 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)