Publish Date: Tue, 16 Oct 2007 (19:52 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவனிடமிருந்து ரூ.14 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள நவ்செரா தல்லா கிராமத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து சிலர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்க முயன்றனர்.
அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவன் கொல்லப்பட்டான். மற்றவர்கள் மீண்டும் பாகிஸ்தானிற்குள் தப்பியோடினர்.
தாக்குதல் நடந்த இடத்தில் 14 போதைப் பொருள் பாக்கெட்டுகள் சிதறிக்கிடந்தன. காவல்துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.14 கோடியாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.