Publish Date: Tue, 16 Oct 2007 (14:31 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)
இந்தியா-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கலந்து கொள்கிறார்.
அணு ஒப்பந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நாளை மறுதினம் நடைபெறுவதாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியா- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா தலையிடாது என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Webdunia
Publish Date: Tue, 16 Oct 2007 (14:31 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)