Publish Date: Mon, 15 Oct 2007 (20:30 IST)
Updated Date: Mon, 15 Oct 2007 (20:30 IST)
மும்பை பங்கு சந்தையையும், தலைநகர் டெல்லியில் உள்ள தேச பங்குச் சந்தை கட்டடத்தையும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மின்னஞ்சலை அடுத்து இவ்விரு இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
தேச பங்குச் சந்தையின் அலுவலர் ஒருவருக்கு வந்த மின்னஞ்சலை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறையின் கூடுதல் ஆணையர் கே.எல். பிரசாத் கூறியுள்ளார்.
மும்பை பங்குச் சந்தை, தேச பங்குச் சந்தை கட்டடங்களுக்கு முன்னெச்சரிக்கையாக வெடிகுண்டு கண்டுபிடிப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்த தனியார் பாதுகாப்புப் படையினரையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக பிரசாத் கூறியுள்ளார்.
மும்பை பங்குச் சந்தைக் குறியீடு எண் 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.
Webdunia
Publish Date: Mon, 15 Oct 2007 (20:30 IST)
Updated Date: Mon, 15 Oct 2007 (20:30 IST)