நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பரவிவரும் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த புதிய இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதில் ஐ.நா. எய்ட்ஸ் எதிர்ப்பு முகமையும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன.
எய்ட்ஸ் விழிப்புணர்வு, அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகளுக்கு சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும்.
இத்திட்டம் குறித்து மத்திய குடும்பநல இணையமைச்சர் பனபாக லட்சுமி கூறுகையில், வடகிழக்கு மாநிலங்கள்தான் எய்ட்ஸ் நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன, எனவே அங்கு அதிக கவனம் தேவைப்படுகிறது என்றார்.
ஒவ்வாரு கிராமத்திற்கும் செல்லவுள்ள இந்த இயக்கத்திற்காக ஆஸ்திரேலிய அரசு 8.9 மில்லியன் டாலர்களைக் கொடுத்துள்ளது.
வடகிழக்கில் உள்ள 6 மாநிலங்களில் மணிப்பூர், நாகாலாந்து ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. நாட்டில் உள்ள 30 விழுக்காடு போதை அடிமைகளும் இங்குதான் உள்ளனர்.