Publish Date: Fri, 12 Oct 2007 (17:01 IST)
Updated Date: Fri, 12 Oct 2007 (17:00 IST)
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வதன் மூலம் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சியில் அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு நடத்திய மாநாட்டில் கேள்வி பதில் நேரத்தின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
''கடந்தமுறை கட்சியில் பொறுப்பு மாற்றத்தின்போது நிறைய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
அவர்களுக்கு அரசிலும், நாடாளுமன்றத்திலும் இன்னும் அதிக வாய்ப்பு அளிக்கப்படும். அது விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்'' என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றம் வருமா என்று கேட்டதற்கு, அதுகுறித்து பிரதமரிடம் கேளுங்கள் என்றார்.
Webdunia
Publish Date: Fri, 12 Oct 2007 (17:01 IST)
Updated Date: Fri, 12 Oct 2007 (17:00 IST)