இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தச் சிக்கலால் அரசிற்கு எந்த பாதிப்பும் வராது என்றும் தனது தலைமையிலான மத்திய அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு நடத்திய மாநாட்டில் பேசிய அவர், '' தேர்தலுக்கு இன்னும் வெகுதூரம் உள்ளது. மீதமுள்ள ஒன்றரை ஆண்டுகளை நிறைவுசெய்ய வேண்டியுள்ளது. அதுவரை நாங்கள் நிலைத்திருப்போம் என்று நான் நம்புகிறேன்'' என்றார்.
மேலும், அணுசக்தி ஒப்பந்தம் பெருமைதரக்கூடியது, இந்தியாவிற்கு நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய பிரதமர், அணுசக்தி ஒப்பந்தத்தின் நன்மைகளை அவர்கள் உணர வேண்டும் என்றார்.