விரையில் வாசனையுடன் கூடிய டிக்கெட்டை இந்தியன் ரெயில்வே துறை அறிமுகப்படுத்த உள்ளது.
ரயில் பயணகளை கவர இந்தியன் ரெயில்வே துறை நறுமணம் வீசக்கூடிய டிக்கெட்டுகளை விரையில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக நறுமண பொருட்கள் தயாரிக்கும் சோம்பு, ஷாம்பூ, சென்ட், அத்தர் ஆகிய நிறுவனங்களுடன் இந்தியன் ரெயில்வே அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முதல் கட்டமாக வடக்கு ரெயில்வேயில் 50 லட்சம் மாதாந்திர டிக்கெட்டிலும், மேற்கு ரெயில்வேயில் 30 லட்சம் மாதாந்திர டிக்கெட்டும் நறுமணத்துடன் அச்சிட முடிவு செய்துள்ளது.
நறுமணத்துடன் தபால் தலை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதால் அதே தொழில்நுட்பத்துடன் நறுமண ரெயில் டிக்கெட்டும் தயாரித்து வெளியிடப்படுகிறது.
மேலும் முன்பதிவு செய்த மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் பின்புறம் விளம்பரம் செய்யவும் ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. விளம்பரம் செய்வதற்கு வசதியாக டிக்கெட்டின் அளவு 15 செ. மீட்டரில் இருந்து 18 செ. மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.