ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமின் சிற்றுண்டி சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்திய ராணுவ வீரர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்!
பாரமுல்லா மாவட்டத்தின் பட்டான் பகுதியில் உள்ள கமாரே கிராமத்தில் ராணுவப் பிரிவு முகாம் ஒன்றில் இன்று காலை 11.20 மணிக்கு இச்சம்பவம் நடந்ததாக ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆனால், இது தாங்கள் நடத்திய தாக்குதல் என்று பிரிவினைவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீன் கூறியுள்ளது.
இதற்கிடையே, தலைநகர் ஸ்ரீநகரில் டால் ஏரி அருகில் அமைந்துள்ள மத்திய கூடுதல் காவற்படையின் முகாமின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.