ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புனித கவாஜா மொய்ன்-உத்-தீன் திஸ்தி கல்லறை அமைந்துள்ள தர்காவில் இன்று மாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்!
அஜ்மீர் தர்காவில் உள்ள ஹாத்தா-ஈ-நூர் என்ற இடத்தில் ரமலான் நோன்பை முடிப்பதற்காக கூடியிருந்தவர்களுக்கு இடையே குண்டு வெடித்ததாக பி.டி.ஐ. செய்தியாளரிடம் அஜ்மீர் காவல் ஆணையர் தீபக் உப்ரெட்டி கூறியுள்ளார்.
டிஃபன் பாக்ஸ் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த குண்டு 6.20 மணிக்கு வெடித்ததாகவும், இதில் மூவர் உயிரிழந்ததாகவும், 17 பேர் காயமுற்றதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
காயமுற்ற அனைவரும் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.