இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய பிரதேச மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி, ராமபிரான் குறித்து விமர்சனம் செய்தார். இந்த நிலையில் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அசோக் பாண்டே என்ற வக்கீல் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், 'கருணாநிதியின் பேச்சு இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. எனவே அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சுதிர் மிஸ்ரா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.