ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும், எனவே இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்றும் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்!
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிக் கட்சிகளின் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும், இக்குழு மீண்டும் வரும் 22ம் தேதி கூடி அடுத்த சுற்று பேச்சுகளை நடத்தும் என்றும் லாலு பிரசாத் கூறினார்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று கூறிய அவர், இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பும் இல்லை என்றார்.
இதற்கிடையே இந்தியா வந்துள்ள சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் எல்பராடியை மும்பையில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.