சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
விமானம் மூலம் நேற்று மும்பை வந்திறங்கிய அவர் தனது பயணத்தின்போது பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
மேலும், மும்பையில் உள்ள புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மேம்படுத்தப்பட்ட மையத்திற்கும் செல்கிறார். அங்கு 'பாபட்ரான் வெர்சன் ii' என்ற அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியின் செயல்பாட்டை பார்வையிடுகிறார்.
இதுபோன்ற ஒரு கருவியை வியட்நாமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிப்பதற்காக சர்வதேச அணுசக்தி முகமைக்கு இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்குச் செல்லும் எல்பராடி, இந்தியாவின் மூத்த அணு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.
சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்.