ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள ஆடைகள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பானிபட்டின் பழைய தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஆடைகள் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது.
தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தீயணைப்புப் படையின் நான்கு வாகனங்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். எனினும் சுமார் 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னரே தீ அணைக்கப்பட்டது.
தொழிற்சாலையில் இருந்து 9 கருகிய உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் தீக்காயமடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் காவல்துறையினரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.