ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
தங்தார் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
5 தீவிரவாதிகள் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. அது முடிந்த பிறகுதான் முழு விவரத்தையும் கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வாரம் மட்டும் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தங்தார் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்ற 40 மணி நேரச் சண்டையில் 9 தீவிரவாதிகளும், 2 ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.