Publish Date: Thu, 04 Oct 2007 (18:22 IST)
Updated Date: Thu, 04 Oct 2007 (18:22 IST)
பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியா மாகபாகல் அர்ரோயோ 3 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார்.
நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியா மகாபாகல் அர்ரோயோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சீனாவில் 2 நாள் பயணத்தை முடித்தபிறகு 3 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகம் மற்றும் அரசியல் தொடர்பான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு நடைபெறும் பல்வேறு பேச்சுக்களிலும் அவர் பங்கேற்கிறார்.
முதன்முதலாக இந்தியா வரும் அர்ரோயோ, இன்று மதியம் மும்பையில் நடைபெற்ற தொழிலதிபர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.
Webdunia
Publish Date: Thu, 04 Oct 2007 (18:22 IST)
Updated Date: Thu, 04 Oct 2007 (18:22 IST)