Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சா‌தி அடி‌ப்படை‌யி‌ல் இடஒதுக்கீடு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு வாதம்!

சா‌தி அடி‌ப்படை‌யி‌ல் இடஒதுக்கீடு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு வாதம்!

Webdunia

, வியாழன், 4 அக்டோபர் 2007 (11:04 IST)
''சமூகத்தில் பல்வேறு சாதியினரிடையே உள்ள ஏற்றத் தாழ்வை நீக்க, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கொள்கை தேவை'' என்று உ‌ச்ச ந‌ீ‌தி‌ம‌ன்ற‌த்‌தி‌ல் மத்திய அரசு வழ‌க்க‌றிஞ‌ர் கூறினார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத‌‌வீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இத‌ற்குஒரு தர‌ப்‌பின‌ர் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்தன‌ர். இதுதொடர்பாக உ‌ச்ச ந‌ீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே.தாக்கர், ஆர்.வி.ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.பராசரன் வாதாடுகை‌யி‌ல், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தின்படி மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதற்காக அரசியல் சட்டத்தில் 93வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது எ‌ன்றா‌ர்.

சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்தை மீறுவது ஆகாது. மேலும் இடஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது. சட்டம் இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தான் உள்ளது எ‌ன்று மேலு‌ம் கூ‌‌றினா‌ர்.

பணப்பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நூறு சதவீத கல்வி அறிவு பெறுவதில் தடைகள் உள்ளன. எனவே இடஒதுக்கீடு மூலம்தான் அவர்களுக்கு கல்வி வழங்க முடியும். சமூகத்தில் பல்வேறு சாதியினரிடையே உள்ள ஏற்றத் தாழ்வை நீக்க, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கொள்கை தேவை எ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர் பராசரன் கூ‌றினா‌ர்.

இடஒதுக்கீட்டில் வசதி படைத்தவர்களை நீக்க வேண்டும் என்ற கொள்கை சமுதாயத்தில் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கும் பொருந்த வேண்டும் என்றார். உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு இல்லாத நிலையில் பொதுப்பிரிவு இடஒதுக்கீட்டில் வசதி படைத்தவர்களை நீக்குவது எப்படி என்பது பற்றி அவர் விளக்கமாக எதுவும் கூறவில்லை எ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர் பராசர‌ன் வாதாடினா‌ர்.

மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாகன்வதி ஆஜரா‌கி வாதாடுகை‌யி‌ல், பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காண்பதற்கு சாதி அடிப்படைதான் தொடக்க நிலையாக இருக்க முடியும் என்றார்.

விவாதத்தின் போது ‌நீ‌திப‌திக‌ள் குறுக்கிட்டு பேசுகை‌யி‌ல், ஒரு குறிப்பிட்ட வழக்கை மட்டும் அடிப்படையாக வைத்து சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நியாயப்படுத்த முடியாது. இடஒதுக்கீட்டு கொள்கையை காலவரையின்றி நீடிக்க முடியாது. அதற்கு ஒரு கால நிர்ணயம் வேண்டும் என்று கூறினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil