கேரளாவில் இன்று அதிகாலையில் மிக மிக லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தேச மங்களம், வரச்சூர், வடக்கன்சேரி மற்றும் மலப்புரம் மாவட்டம் திருநயா, பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி ஆகிய இடங்களில் இன்று அதிகாலை திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு 4 வினாடிகள் நீடித்தது.
இதை உணர்ந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து திடீரென விழித்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓட்டி வந்தனர். தெருக்களிலேயே விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தனர்.
இந்த நில அதிர்வை அங்குள்ள காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.1 புள்ளியாக பதிவாகி உள்ளது.