காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 139வது பிறந்த நாளையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது சமாதிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, சிவராஜ் பாட்டீல் மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா திட்சித், சுனிதா வில்லியம்ஸ் உள்பட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.