1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியருக்கு எதிரான கலவரம் தொடர்பாக காங்கிரசுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெக்தீஸ் டைட்லர் மீது தொடரப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) இன்று ரத்து செய்தது.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்றுகளுக்கு தகுந்த ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மபுக கூறியுள்ளது.
இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்த வழக்கில் குற்றத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகள் பலர் இறந்துவிட்டனர். உயிருடன் இருப்பவர்கள் சாட்சி சொல்ல மறுக்கின்றனர் என்று கூறியுள்ளது.
மபுக-வின்அறிக்கையில் மறைந்த காங்கிரசு எம்.பி தரம் தாஸ் சாஸ்திரியின் பெயரும் உள்ளது.