தேசிய கொடியை அவமதிப்பு வழக்கில் நடிகர் அமீர்கானுக்கு நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபல தனியார் நிறுவனத்தின் கார் விற்பனை காட்சியகம் திறப்பு விழா நடந்தது. இதில் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு புதிய கார்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அங்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது. சூரியன் மறைந்த பின்பும் தேசிய கொடி இறக்கப்படாமல் இருந்தது.
சூரிய மறைந்த பின்பு தேசிய கொடி ஏற்றவும் கூடாது பறக்கவும் கூடாது. இதை மீறி தேசிய கொடியை பறக்க விட்டதால் அதைப் பார்த்தவர்கள் நடிகர் அமீர்கான், கார் ஷோரூம் உரிமையாளர்கள் அசோக் ராஜ்பால், ராகேஷ் ராஜ்பால் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அமீர்கான் உள்பட 3 பேருக்கும் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. அதில், வரும் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.