குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் நடந்த ஆய்வில் உலகிலேயே மிகவும் வயதான பாம்பின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாம்பு சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறைஅதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்தப் பாம்புப் படிமம், உலகிலேயே வயதான பாம்பின் உருவத்தைக் காட்டுவதோடு மட்டுமின்றி, அதன் பரிணாமம் பற்றியும் நமக்குத் தெரிவிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் நடைபெற்ற மத்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் 42-வது வருடாந்திரக் கூட்டத்தில் அந்த படிமம் காட்சிக்கு வைக்கப்பட்டது.