Newsworld News National 0709 26 1070926039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா.ஜ.க.வை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

Advertiesment
சேது சமுத்திர திட்டம் பாஜக விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Webdunia

, புதன், 26 செப்டம்பர் 2007 (19:21 IST)
சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதற்கு தடையாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் போக்கை கண்டித்து புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேது சமுத்திர திட்டத்திற்காக கால்வாய் தோண்டும் பகுதியில் ராமர் கட்டிய பாலம் இருப்பதாகவும் (ஆதம் பாலம்), கால்வாய் வெட்டுவதால் அந்த பாலம் சிதைந்துவிடும் என்று கூறி பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் இந்த போக்கை கண்டித்து புதுவையில் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரியும், ா.ஜ.க, சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்தும் முழக்கமிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil