Publish Date: Wed, 26 Sep 2007 (16:31 IST)
Updated Date: Wed, 26 Sep 2007 (16:30 IST)
நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் நடந்தால் தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பாஐகவின் முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், "ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால் தமிழகத்தில் சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து மாநிலக் குழுவுடன் பாஜக உயர்மட்டக்குழு கலந்தாலோசிக்கும். இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை" என்றார்.
Webdunia
Publish Date: Wed, 26 Sep 2007 (16:31 IST)
Updated Date: Wed, 26 Sep 2007 (16:30 IST)