Newsworld News National 0709 25 1070925022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா.ஜ.க. முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்!

Advertiesment
பா.ஜ.க. ஜனா கிருஷ்ணமூர்த்தி

Webdunia

, செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (15:23 IST)
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவருமான ஜனா கிருஷ்ணமூர்த்தி இன்று காலை மரணமடைந்தார்!

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜனா கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பெற்று வந்தார். நோயின் கடுமையால் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் உணர்விழந்தார்.

இந்த நிலையில் அவருடைய உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இன்று காலை 10.15 மணிக்கு அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 79.

ஜனா கிருஷ்ணமூர்த்தியின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் மஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன், அகில இந்திய செயலர் சு. திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் உடலிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாளை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil