Publish Date: Sun, 23 Sep 2007 (17:08 IST)
Updated Date: Sun, 23 Sep 2007 (17:07 IST)
கருணாநிதி பற்றி நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. சாமியார்களுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது என வேதாந்தி சாமியார் கூறியுள்ளார்.
விசுவஇந்து பரிஷத் தலைவர் வேதாந்தி, கருணாநிதியை பற்றி கூறிய கருத்து தி.மு.க.வினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் கருணாநிதி பற்றி நான் அப்படி கூறவில்லை என்று வேதாந்தி மறுத்துள்ளார்.
ராமர் தொடர்பான கருணாநிதி கூறிய கருத்துக்கு நான் கண்டனம் மட்டுமே தெரிவித்தேன். அப்போது பகவத்கீதையில் இருந்து சில உதாரணங்களை எடுத்து வைத்து சொன்னேன் என்று வேதாந்தி தெரித்துள்ளார்.
இதை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு எழுதிவிட்டனர். கருணாநிதி பற்றி நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. சாமியார்களுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது என வேதாந்தி சாமியார் கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Sun, 23 Sep 2007 (17:08 IST)
Updated Date: Sun, 23 Sep 2007 (17:07 IST)