பீகாரில் நக்சல்கள் தாக்கியதில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது, அங்கு புகுந்த நக்சலைட் இயக்கத்தினர், காவல்துறையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். காவல்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் இருவருக்கும் இடையே கடும் தாக்குதல் நடந்தது. அதில், மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.