"முகலாயர்களுக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் கூட கடவுள் இராமர் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பத் தைரியமில்லை. இராமர் பிறப்பைப் பற்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லை மீறிக் கேள்வி எழுப்பிவிட்டது" என்று பாஜகவின் 3 நாள் செயற்குழுக் கூட்டத்தின் போது அத்வானி கூறியுள்ளார்.
"இராமர் இருக்கிறாரா? இராமர் பாலம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி மக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக" பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் பொது மக்களிடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
"இராமர் பாலம் திட்டமிட்டபடி இடிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களின் அறிவுரைப்படி தயாரிக்கப்பட்டு அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியனால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தில் இதற்கான ஆதாரம் உள்ளது" என்று கூறியுள்ளார்.