விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியப் பெண்களுக்கு ஒரு ஆக்கமூலம் என்றும் இந்தியக் குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணம் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஒருவார சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது தந்தையின் சொந்த மாநிலமான குஜராத் வந்த சுனிதா, மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார்.
இந்நிலையில் சுனிதாவிடம் இன்று தொலைபேசியில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், அவரை மகிழ்ச்சியுடன் டெல்லிக்கு வரவேற்றார் என்று பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.