Publish Date: Fri, 21 Sep 2007 (13:39 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)
இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து எழுந்துள்ள சிக்கலால் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழும் அபாயம் இல்லை என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய அணு ஒப்பந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுத் தீர்வு காணப்பட்டுவிடும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
’’இடதுசாரித் தலைவர்கள் மீது நான் நல்லமரியாதை வைத்துள்ளேன். அணு ஒப்பந்த விவகாரத்தில் நடைபெறும் பேச்சில் நல்ல தீர்வு காணப்பட்டுவிடும் என்று நம்புகிறேன்’’ என்று மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.