ராமர் பாலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கமளிக்குமாறு தொல்லியல் துறையிடம் மத்திய அரசின் பண்பாட்டுத் துறை விளக்கம் கோரியுள்ளது!
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மத ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து தொல்லியல் துறையின் நிர்வாக இயக்குநர் சந்திரசேகரும், பாரம்பரிய சின்னங்கள் பிரிவின் உதவி இயக்குநர் பக்சியும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அயல் நாட்டு பயணத்திலிருந்து நாடு திரும்பிய பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு தொல்லியல் துறையின் இயக்குனர் அன்ஷூ வைஷ்-யிடமும் விளக்கம் கோரியுள்ளது மத்திய அரசு. செவ்வாய்க் கிழமைக்குள் விளக்கம் அளிக்குமாறு அன்ஷூவை பண்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளது