Publish Date: Tue, 11 Sep 2007 (15:52 IST)
Updated Date: Tue, 11 Sep 2007 (15:52 IST)
ஹைதராபாத் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் கிரண் பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானது. இதி்ல் விமானியும், பயிற்சிக்கு வந்த மற்றொருவரும் உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள ஹக்கிம்பேட் விமான தளத்தில் இருந்த புறப்பட்ட சில நிமிடங்களில் இவ்விபத்து நடந்ததாகவும், இந்த விமானத்தை செலுத்திய ஸ்குவாட்ரான் லீடர் ஜெகத்தும், அவரிடம் பயிற்சிக்கு சென்றிருந்த பதி என்ற வீரரும் உயிரிழந்ததாகவும், தரையில் விழுந்து வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்ததில் விமானம் முழுவதுமாக சாம்பலாகிவிட்டதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Tue, 11 Sep 2007 (15:52 IST)
Updated Date: Tue, 11 Sep 2007 (15:52 IST)