அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் 4 நாட்களுக்கு முன்பாகவே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகயினர் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். நேற்றும் இதேபோல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அவையை சிறப்பாக நடத்த வேண்டும் என்று தான் எடுத்த முயற்சிகளுக்கு எவ்வித பலனும் இல்லை. இதனால் 42 மணி நேரம் வீணாகிவிட்டது. அவையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக கூறினார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடந்த மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ஆம் தேதி வரை நடைபெற வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியினர் செய்த அமளியால் 4 நாட்களுக்கு முன்னதாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபை தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு சபையை சுமுகமாக நடத்தவே நாங்கள் முயற்சித்தோம். ஆனால், தொடர்ந்து சபையை ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதால் காலவரையின்றி ஒத்திவைப்பதை தவிர வேறு வழியில்லை என்று வேதனையுடன் கூறினார்.
நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு அவையை சுமூகமாக நடந்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததால், காலவையின்றி ஒத்திவைப்பதை தவிர வேறு வழியில்லை என்றார்.