Publish Date: Sat, 08 Sep 2007 (10:16 IST)
Updated Date: Sat, 08 Sep 2007 (10:14 IST)
ராஜஸ்தானில் மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 85 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சாமந்த் மாவட்டத்தில் உள்ள ராம்தேவ்ரா கோயிலுக்கு டிரெய்லர் லாரியில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று சென்றனர். இரவு 8 மணிக்கு குறுகிய வளைவுள்ள மலைப்பாதையில் லாரி சென்று கொண்டிருந்தது. திசூரி கி நால் என்ற கிராமம் அருகே லாரி சென்ற போது ஒரு வளைவில் திரும்பியது. அப்போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்தது. இதில் 85 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து பற்றி தகவல் அறிந்து உதைப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 75 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயம் அடைந்த 62க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள வரீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.