Publish Date: Fri, 07 Sep 2007 (11:23 IST)
Updated Date: Fri, 07 Sep 2007 (11:22 IST)
போலிக் கடவுச் சீட்டை பயன்படுத்தியதாக மத்திய பிரதேச அரசு செய்த மேல் முறையீட்டு வழக்கில் இருந்து மோனிகா பேடி விடுதலை செய்யப்பட்டார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தி நடிகை மோனிகா பேடியை கடந்த ஜூலை 16ஆம் தேதி தலைமை ஜுடிசியல் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து செசன்சு கோர்ட்டில் மத்திய பிரசேத அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேணுசர்மா நேற்று தீர்ப்பளித்தார். அதில், மோனிகா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பு பல்வேறு முரண்பாடான தகவல்களை தெரிவித்துள்ளது. இதனால் மோனிகா பேடியை விடுவிக்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.