Publish Date: Fri, 07 Sep 2007 (18:02 IST)
Updated Date: Fri, 07 Sep 2007 (18:02 IST)
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் உயிர் தப்பினர்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மனைவியும் மாநில குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமியுடன் இன்று அதிகாலை காரில் திருப்பதிக்கு சென்று கொண்டு இருந்தனர். பாதுகாப்புக்காக இவர்களுக்கு பின்னால் 4 கார்கள் வந்து கொண்டிருந்தன.
நெல்லூர் அருகே கார் வந்த போது சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. இந்த தாக்குலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதில் ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த தாக்குதலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். இந்த குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.