அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
எய்ம்ஸ் நிர்வாகத்தில் அதிகாரம் படைத்த 11 பேர் கொண்ட உயர்மட்ட குழு தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், எய்ம்ஸ் நிர்வாகத்தில் பதிவாளர் குப்தா நியமனம் குறித்தும், முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரித்துள்ளன.
மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களில் அமைச்சர் அன்புமணி கையெழுத்திடுதல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.