மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து இடதுசாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி சோஷலிச கட்சி கோரியுள்ளது.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தம், ஹென்றி ஹைட் சட்டம் ஆகியன குறித்து ஆராய குழு அமைத்துள்ள அதே வேளையில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று பிரதமரும், சோனியா காந்தியும் கூறியிருப்பது அக்குழுவை அர்த்தமற்றதாக்கிவிட்டது என்று புரட்சி சோஷலிச கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.ஜே. சந்திரசூடன் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறிய சந்திரசூடன், அணு சக்தி ஒத்துழைப்பில் அரசு உறுதியாக இருக்குமானால், அதற்கு அளித்து வரும் ஆதரவை விளக்கிக் கொள்வது குறித்து இடதுசாரிக் கூட்டணி பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.