அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த பிரச்சினைக்கு தீர்வு காண பிரணாப் முகர்ஜி தலைமையில்15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படுத்துவதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் அடங்கிய அரசியல் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், கபில்சிபல், சைபுதீன் சோஸ், பிருதிவிராஜ் சவாண் மற்றும் லாலு பிரசாத் யாதவ் (ஆர்.ஜே.டி.), டி.ஆர்.பாலு (தி.மு.க.), சரத்பவார் (என்.சி.பி.) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இடதுசாரி கட்சிகள் சார்பில் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி (மார்க்சிய கம்யூ.) ஏ.பி.பரதன், டி.ராஜா (இந்திய கம்யூ.) தேவவிரத விஸ்வாஸ் (பா.பி.), டி.ஜே.சந்திரசூடன் (ஆர்.எஸ்.பி.) ஆகியோர் உள்ளனர்.