Publish Date: Sat, 01 Sep 2007 (20:29 IST)
Updated Date: Sat, 01 Sep 2007 (20:29 IST)
நமது நாட்டின் நீண்ட நலன் கருதியே இந்திய - அமெரிக்க அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்!
கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ள சோனியா காந்தி, நாட்டின் எதிர்கால நலன் கருதியே அணு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அணு ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்த பிரதமருக்கும், அவர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திய குழுவிற்கும் தனது பாராட்டுகளை தெரிவித்த சோனியா காந்தி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் திருப்தியளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.