இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மீது இடதுசாரிகள் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு தீர்வுகண்டு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு செயல்படும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
சார்க் கருத்தரங்கிற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, அணு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தம் குறித்து ஆராய, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகளும் ஒப்புக்கொண்டு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்குழு அளிக்கும் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராகவே உள்ளது என்று கூறிய பிரணாப் முகர்ஜி, இந்திய - அமெரிக்க அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அரசு செயல்படும் என்று கூறினார்.