இன்சாட்-4சிஆர் செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் இன்று துவங்கியது!
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண் மையத்தில் இருந்து, 2,130 கி.கி. எடை கொண்ட நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்சாட்-4சிஆர், ஜி.எஸ்.எல்.வி.-எஃப்04 விண்கலத்தின் மூலம் நாளை மாலை 4.21 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. அதற்கான 27 மணி நேர கவுண்ட்டன் இன்று மதியம் 1.21 நிமிடத்திற்கு துவக்கப்பட்டது என்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில் செலுத்தப்ட்ட ஜி.எஸ்.எல்.வி.-எஃப்02 தோல்வியையடுத்து, இந்த முறை வெற்றிகரமாக செயற்கைக்கோளை செலுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.