Publish Date: Wed, 29 Aug 2007 (10:28 IST)
Updated Date: Wed, 29 Aug 2007 (10:27 IST)
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் லாரி ஒன்று நான்கு இளைஞர்கள் மீது மோதியதில் நால்வரும் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் இனத்தினர் கோபமுற்று ஆக்ரா பகுதியில் இருந்த 10 வாகனங்களை சேதப்படுத்தினர். பல கடைகளை அடித்து நொறுக்கினர்.
இதனால் அங்கு கடும் பதற்றம் நிலவியது. 2 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.