Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹைதராபாத் குண்டு வெடிப்பு : உயிரிந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

ஹைதராபாத் குண்டு வெடிப்பு : உயிரிந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு!
, ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007 (14:03 IST)
webdunia photoWD
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று இரவு நடந்த இரண்டு குண்டு வெடிப்புக்களில் காயமுற்ற 5 பேர் மருத்துவமனையில் உயிரிந்ததையடுத்து பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது!

ஹைதராபாத் நகரில் உள்ள லும்பினி பூங்கா எனும் திறந்தவெளி அரங்கில் லேசர் காட்சி நடந்துகொண்டிருந்தபோது, இரவு 7.30 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 8 பேர் மாண்டனர். 30 பேர் காயமுற்றனர்.

ஐந்து நிமிட நேரத்தில் அந்நகரில் உள்ள துரித உணவகத்தில், மக்கள் நிறைந்திருந்த நேரத்தில் அடுத்த குண்டு வெடித்தது. இதில் 31 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் காயமுற்றனர்.
காயமுற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

படுகாயமுற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil