இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்படும் என்று அயலுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
எந்தெந்த நாளில் விவாதம் நடைபெறும் என்பதனை நாடாளுமன்ற நடவடிக்கை ஆலோசனை குழு முடிவு செய்யும் என்று கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அதுபற்றி இங்கு விவாதிக்கக் கூடாது என்று பதிலளித்த பிரணாப் முகர்ஜி, "நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அதுபற்றி முழுமையாக விவாதிக்கலாம். அதே நேரத்தில் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகளுடன் விவாதித்து வருகிறோம்" என்று கூறினார்.