Publish Date: Thu, 23 Aug 2007 (15:17 IST)
Updated Date: Thu, 23 Aug 2007 (15:17 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு ஏற்றால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசியல் தலைமைக் குழு (பொலிட் பிரோ) முடிவெடுக்க மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்றும், இன்றும் நடந்த மத்தியக் குழுக் கூட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.