Publish Date: Wed, 22 Aug 2007 (16:59 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:10 IST)
அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரோனன் சென்-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று கூறி இடதுசாரி, பாஜக கூட்டணிகளின் உறுப்பினர்கள் ஏற்படுத்திய அமளியால் நாடாளுமன்ற அவைகள் தள்ளிவைக்கப்பட்டன.
இன்று காலை இரு அவைகளும் இயங்கத் துவங்கியதுமே தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்த எதிர்க்கட்சி, இடதுசாரி உறுப்பினர்கள் ரோனன் சென்னிற்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்ததால் அவை நடவடிக்கைகள 1 மணி நேரத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக அவை தலைவர்கள் அறிவித்தனர்.