Publish Date: Wed, 22 Aug 2007 (10:36 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:10 IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நேற்று காலையில் திடீரென தலை சுற்றலும், சோர்வும் ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு வாஜ்பாய்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
83 வயதாகும் வாஜ்பாய் மிகவும் சோர்வாக இருந்தார். மருத்துவமனையில் உள்ள இருதயம் மற்றும் நரம்பு தொடர்பான சிறப்பு பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இருதய நோய் நிபுணர்கள் மற்றும் நரம்பு சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழுவினர் வாஜ்பாயின் உடல்நிலையை கவனித்து வருகின்றனர்.
தற்போது வாஜ்பாயின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கூறினார்.
Webdunia
Publish Date: Wed, 22 Aug 2007 (10:36 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:10 IST)