Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது

Advertiesment
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது

Webdunia

, செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (16:39 IST)
மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகளவிடுத்கோரிக்கைகளஏற்கப்பட்டதஅடுத்தஅவர்களமேற்கொள்வதாஇருந்காலவரையற்வேலை நிறுத்தபபோராட்டமதிரும்பபபெறப்பட்டது.

மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சம்பள உயர்வு, இடைக்கால நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து மத்திய அரசின் பெட்ரோலியத் துறை சார்பில் அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. ஒவ்வொரு அதிகாரிக்கும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை இடைக்கால நிவாரணம் வழங்க சம்மதம் தெரிவித்தனர். வேறு பல கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன.

இதையடுத்து வேலை நிறுத்தத்தை திரும்ப பெறப் போவதாக அதிகாரிகள் சங்க தலைவர் சஞ்சய்கோயல் அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil