இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு பிரச்சனையில் இடதுசாரிகளுக்கும், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே நிலவிவரும் எதிரெதிரான நிலைப்பாட்டால் நாட்டில் மீண்டும் ஒரு தேர்தல் வருவதற்கான சாத்தியமில்லை என்று ஜோதி பாசு கூறியுள்ளார்!
அணு சக்தி ஒப்பந்தத்தை வாக்கெடுப்பற்ற நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்ட முறையில் நாடாளுமன்றஙத்தில் விவாதத்தை நடத்த வேண்டும் என்று கூறிய மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதி பாசு, இந்தப் பிரச்சனையால் நாட்டில் ஒரு தேர்தல் வர வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுத்தாலும், கடுமையான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எச்சரித்துள்ள நிலையில், அரசிற்கு அளித்துவரும் ஆதரவு தொடரும் என்பது போல, இடைத் தேர்தல் வராது என்று மூத்த தலைவர் ஜோதி பாசு கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.